நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள இலங்கை சுற்றுப்பயணத்தின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு 17 பேர் கொண்ட டெஸ்ட் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் மார்ச் 9 திகதி ஆரம்பமாகி மார்ச் 25 திகதி முடிவடைகிறது. பெப்ரவரி 27 ஆம் திகதி திமுத் கருணாரத்ன தலைமையிலான 17 கொண்ட வீரர்கள் குழு நியூசிலாந்திற்கு புறப்பட உள்ளது.